வடக்கு தீவுகள் பெற்றமை வணிக நடவடிக்கைகளுக்காகவே - இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் சீனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

வடக்கு தீவுகள் பெற்றமை வணிக நடவடிக்கைகளுக்காகவே - இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் சீனா

வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையென சீனா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனை வெளியிட்டுள்ள சீனா, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை பிராந்தியத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமாக மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்ய முடியுமென சீனா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வட பகுதியிலுள்ள 03 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad