திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகரா குமார - 4 என்ற இழுவைப் படகில் நெடுநாள் மீன்பிடிக்கு கடந்த 26 ஆம் திகதி சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல் போயுள்ள குறித்த 7 மீனவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீனவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். திருகோணமலை கடற்படையினர் குறித்த மீனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad