அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி

ஒரு ஏக்கருக்கு அதிக விவசாய நிலங்களைக் கொண்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கிகளை வழங்கத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவசாய பொருட்களுக்கு வன விலங்குகளால் ஏற்படும் சேதம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விவசாயி ஒருவருக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு, ஐந்து ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டுமென, இதற்கு முன்னர் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், சாதாரண விவசாயி ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலமே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் காரணமாக அதற்கான தேவையை கொண்டுள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் உரிய அனுமதியை அண்மையில் வழங்கியதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad