மேற்கத்திய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

மேற்கத்திய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் பல விவாதங்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நன்கு அறிந்திருக்கும் என்ற அடிப்படையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அத்தோடு ஜெனீவா விவகாரம் குறித்து பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad