தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா கடன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா கடன்

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள பொது போக்கு வரத்து சேவையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு விசேட கடன் திட்டம் ஒன்றை போக்கு வரத்து அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

அதற்கிணங்க அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா கடன் வழங்குவதற்கும் டிக்கெட் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபா கடன் ஒன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க போக்கு வரத்து அமைச்சு, தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு, போக்கு வரத்து அதிகார சபை ஆகியன இணைந்து அரச வங்கிகள் ஊடாக இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக 27 பஸ் உரிமையாளர்களுக்கு மேற்படி கடன்களை பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்கள் கையளிப்பு தேசிய போக்கு வரத்து ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment