ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியல் வெளியீடு : யாழ். இளைஞன் அடங்களாக 9 இலங்கை வீரர்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியல் வெளியீடு : யாழ். இளைஞன் அடங்களாக 9 இலங்கை வீரர்கள்

இந்த வருடத்திற்கான 14வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

8 அணிகள் சார்பில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில் 139 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித் ஹர்பஜன் சிங் மேக்ஸ்வெல் ஆரோன் பின்ச் உள்ளிட்ட 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

குசல் பெரேரா
திஸர பெரேரா
கெவின் கொத்திகொட
மஹேஷ் தீக்சன
துஷ்மந்த சமீர
வனிந்து ஹசரங்க
தசுன் ஷானக
இசுறு உதான ஆகியோருடன் விஜயகாந்த் வியஸ்காந்தும் இலங்கை வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகம் சார்பில் ஷாருக்கான், சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், முகமது என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இங்கிலாந்தின் மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகியோருக்கு அடிப்படை ஏலத் தொகையாக தலா ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தவிர, 12 வீரர்களுக்கு தலா ரூ. 1.5 கோடி, இந்தியாவின் ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு தலா ரூ. ஒரு கோடி அடிப்படை ஏலத் தொகையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஜாம்பவான் சச்சின் மகனுக்கு ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.இ) தொடரின் 13வது தெடார் கொரோனா வைரர பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad