கிண்ணியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

கிண்ணியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட நடு ஊற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்காக கணவர் கொழும்பிற்கு சென்று வந்ததாகவும் இறுதியாக அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்வதற்காக கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை அவருடைய குடும்பத்தினருக்கு இன்று (18) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த தகப்பன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித் தெரிவித்தார்.

அத்துடன் இவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த குடும்பத்தை சேர்ந்த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அவரது வகுப்பு மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறித்த வகுப்பு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment