கடந்த 66 ஆண்டுகளில் இல்லாதவாறு பிரித்தானியாவில் கடும் குளிர் - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

கடந்த 66 ஆண்டுகளில் இல்லாதவாறு பிரித்தானியாவில் கடும் குளிர்

கடந்த 66 ஆண்டுகளில் இல்லாதவாறு பிரித்தானியாவில் நாடு முழுவதும் கடுமையான குளிர் காலநிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், கடும் குளிர் நிலை நேற்று இரவு பதிவாகியதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடுமையான குளிர் பதிவாகியுள்ளது.

கடுமையான குளிர் காலநிலை பற்றி தகவல் குறித்து இங்கிலாந்து வானிலை அவதான நிலையத்தின் டுவிட்டர் பதிவில், "1955 பெப்ரவரி 23 முதல் இல்லாத அளவு பிரித்தானியா முழுவதும் நேற்று இரவு குளிர் காலநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1962/1963 பனிப் பொழிவு பிரபலமற்ற குளிர்காலமும் அடங்கும். 

இன்று காலை 08:13 மணிக்கு அபெர்டீன்ஷையரின் ப்ரேமரில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.0 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 66 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரித்தானியாவில் பதிவான மிகவும் குளிரான பெப்ரவரி இரவு அது என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad