ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெடி விபத்தில் தளபதி உட்பட ஐந்து பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad