20 ஆவது திருத்தம் இல்லாவிட்டால் ஜெனிவாவில் நெருக்கடியைக் குறைத்திருக்கலாம் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

20 ஆவது திருத்தம் இல்லாவிட்டால் ஜெனிவாவில் நெருக்கடியைக் குறைத்திருக்கலாம் - கரு ஜயசூரிய

நா.தனுஜா

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு இன்னும் சிறப்பாக முகங்கொடுத்திருக்க முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட மிகச் செறிவான அதிகாரங்கள், அரசியல் ரீதியில் பாரிய பிளவொன்றைத் தோற்றுவித்திருப்பதுடன் ஜனநாயகக் கட்டமைப்பையும் வலுவிழக்கச் செய்திருக்கிறது.

இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரை இன்னும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment