நீங்கள் 18 - 26 வயதுக்குட்பட்டவரா உங்களுக்கே இந்த அழைப்பு : இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு : ஆண்/பெண் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

நீங்கள் 18 - 26 வயதுக்குட்பட்டவரா உங்களுக்கே இந்த அழைப்பு : இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு : ஆண்/பெண்

இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளும் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நீங்களும் 18 - 26 வயதுக்குட்பட்ட, திருமணமாகாதவராயின், இலங்கை இராணுவத்தில் இணைய உங்களுக்கும் வாய்ப்பு உள்ளதாக, இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து பிரதேச செயலகங்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களையும் (SFHQ) உள்ளடக்கிய சாதாரண சிப்பாய்கள் மற்றும் தொழில்சார் சிப்பாய்கள் இணைத்துக் கொள்ளும் இராணுவ ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தொழிற்துறை மற்றும் பொது கடமைத் துறைகளில் தற்போதுள்ள வெற்றியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேவையின் அனுகூலங்கள்
இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் மன உறுதி மற்றும் உற்பத்தித்திறனினை மேம்படுத்தும் நோக்கத்துடன் நலன்புரி மற்றும் சேமலாப நன்மைகளை அதிகரிப்பதற்காக கீழ்க் காணப்படும் சேவைகள் மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

இலவச உணவு, தங்குமிடம், சீருடை, போக்குவரத்து வசதிகள்
சகல அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கான உணவுகள், தங்குமிடம்,சீறுடைகள் மற்றும் கடமையின் போது போக்குவரத்து வசதிகள் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

வைத்திய மற்றும் பல் வைத்திய சேவைகள்
சகல அங்கத்தவர்களின் மற்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

விளையாட்டு
எந்தவொரு விளையாட்டொன்றிற்கும் உரித்துடையதான சர்வதேச மட்டத்துடைய வசதிகள் இராணுவத்தின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடன் வசதிகள்
தன்னுடைய சேவைக் காலத்தினைப் பர்த்தி செய்ததன் பின்னர்இ அரசாங்க கடன் சலுகையினைப் பெற்றுக் கொள்ள முடிவதோடுஇ இராணுவ அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக நாடு பராகவும் நிறுவப்பட்டுள்ள விடுமுறைக் களிப்பிடங்கள் போன்ற மற்றும் ஏனைய வசதிகளுக்காகவும் சிறப்புச் சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றது.

அதிகாரிகள்

தேர்விற்கான அளவுகோல் (ஆண்)
குறைந்த பட்ச கல்வித் தகைமைகள்
பட்டப்படிப்பு பயிற்சிநெறி

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், சிங்களம், தமிழ் பாடங்கள் உட்பட ‘B’ சித்தியுடன் 5 பாடங்கள் உட்பட முழுமையாக எட்டு பாடங்கள் சித்தியடைந்திருத்தல்வேண்டும்.

மற்றும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் இரண்டாவது தடவையினுள் மூன்று பாடங்களில் சித்தியடைந்து பொதுபரீட்சையிலும் 30% புள்ளிகளையும் பெற்றிருக்கவேண்டும்.

அடிப்படைத் தகைமைகள்
வயது - அனுமதிக்கப்படும் திகதிக்கு வயது 18 – 22 இனைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
உயரம் - 5 அடி 5 அங்குலம்
நிறை - 50 கிலோகிராம்
மார்பு - 32 அங்குலம்
திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

தேர்விற்கான அளவுகோல் (பெண்)
குறைந்த பட்ச கல்வித் தகைமைகள்

க.பொ.த (ச/த) பரீட்சையில் - சிங்களம் அல்லது தமிழ் மொழி மூலங்களில் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்து, ஆங்கிலம் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

க.பொ.த (ச/த) பரீட்சையில் இரு அமர்வுகளுக்கு மேற்படாத எண்ணிக்கையில் ஒரே தடவையில் கணிதப் பாடம் உட்பட திறமைச் சித்திகள் நான்குடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் ஆங்கில மொழியும் சித்தியடைந்து இருத்தல்.

க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்து இருத்தல்.

அடிப்படைத் தகைமைகள்
வயது - அனுமதிக்கப்படும் திகதிக்கு வயது 18 - 22 இனைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

உயரம் - 5 அடி 2 அங்குலம்

திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

ஏனைய படை வீரர்கள்

திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (ஆண்)
முழுமையான கல்வி தராதரம்

கா.பொ. த. சாதாரண தர பரீட்சை (ஒரே தடைவையில் சித்தி)

அடிப்படை தகைமைகள்
வயது - 18 - 24 வரை
உயரம் - 5’ 4’’
திருமணமாகாதவர்

திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (பெண்)
முழுமையான கல்வி தராதரம்

கா.பொ. த. சாதாரண தர பரீட்சை (ஒரே தடைவையில் சித்தி)

அடிப்படை தகைமைகள்
வயது - 18 முதல் 24 வரை
உயரம் - 5’ 4’’
திருமணநிலை
திருமணமாகாதவர்

இராணுவத்தில் சேர விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு வயதெல்லைகள், கல்வி தகமைகள், தகமைகள், சம்பள விபரங்கள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள், வைத்திய வசதிகள் மற்றும் ஏனைய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ஆவணங்களுடனும் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு நேரடியாக சென்று ஆட்சேர்ப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இலக்கங்கள்
பாதுகாப்பு படைத் தலைமையகம் - யாழ்ப்பாணம்
011 4056102/076 5303715

பாதுகாப்பு படைத் தலைமையகம் - வன்னி (வவுனியா) 
076 6907293

பாதுகாப்பு படைத் தலைமையகம் - கிழக்கு(வெலிகந்தை)
027 2259128/076 6907297

பாதுகாப்பு படைத் தலைமையகம் - கிளிநொச்சி
076 4514395/070 1918333

பாதுகாப்பு படைத் தலைமையகம் - முல்லைத்தீவு
071 2138268

பாதுகாப்பு படைத் தலைமையகம் - மேற்கு
076 5303721

பாதுகாப்பு படைத் தலைமையகம் - மத்திய (தியதலாவ )
076 6907304 / 0765303719

ஆடசேர்ப்பு பணிப்பகம் (கொஹுவளை)
011 2815080 / 011 3137553

No comments:

Post a Comment