மீட்கப்பட்ட 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் - தலைமறைவாகியுள்ள ரஜித்த அசங்கவின் விசாரணைகளை CID முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

மீட்கப்பட்ட 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் - தலைமறைவாகியுள்ள ரஜித்த அசங்கவின் விசாரணைகளை CID முன்னெடுப்பு

பிலியந்தலை - மடப்பாத்த - படுவந்தர பகுதியில் மீட்கப்பட்ட 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருள் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள படோவிட்ட அசங்க எனப்படும் ரஜித்த அசங்கவினுடையதென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

பிலியந்தலை, மடப்பாத்த - படுவந்தர பகுதியில் 03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினமிரவு பயணித்தபோது ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, அவரிடமிருந்து 03 கிலோ 250 கிராம் அடங்கிய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மற்றுமொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் தேடுதலின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad