கல்முனை தெற்கு MOH இடமாற்றம், வெற்றிடத்திற்கு மருதமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி நியமனம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 1, 2021

கல்முனை தெற்கு MOH இடமாற்றம், வெற்றிடத்திற்கு மருதமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி நியமனம்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.அஸ்மி இன்று (01) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிபாரிசுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை (02) சனிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக செயற்பட்ட டாக்டர் எம்.ஐ. றிஸ்னி முத்து, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad