கருத்து சுதந்திரம் சமூக வலைத்தள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக் கூடாது - அமெரிக்க ஜனாதிபதியின் டுவிட்டர் முடக்கத்துக்கு ஜேர்மனி ஜனாதிபதி கருத்து - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

கருத்து சுதந்திரம் சமூக வலைத்தள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக் கூடாது - அமெரிக்க ஜனாதிபதியின் டுவிட்டர் முடக்கத்துக்கு ஜேர்மனி ஜனாதிபதி கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7ம் திகதி நடைபெற்றது.

அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் போலீஸ் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கிடையில், இந்த வன்முறை சம்பவத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இந்த கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகக்கூறி ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது.

டுவிட்டரை தொடர்ந்து டிரம்பின் பேஸ்புக் கணக்கும் நிரந்தரமாக முடக்கப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாட்டு அரசியல்வாதிகளும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மட்டும் நிரந்தரமாக மூடப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

ஒரு நபரின் கருத்து மற்றவர்களின் மனதை துன்புறுத்தும், அல்லது வன்முறையை தூண்டும் என சமூகவலைத்தள நிறுவனங்கள் எவ்வாறு தீர்மானிக்கின்றன. இது கருத்து சுதந்திரத்தை முடக்கம் செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள நிறுவனங்கள் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் அமெரிக்க ஜனாதிபதியின் டுவிட்டர் உட்பட சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது அடிப்படை உரிமைகளில் கருத்துச் சுதந்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. அடிப்படை உரிமைகள் சட்டத்தின் மூலமாகவும், வரையறுக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் மூலமாகவும் மட்டுமே நடைபெற வேண்டும். 

கருத்துச் சுதந்திரம் என்பது சமூக வலைத்தள பங்கங்களின் உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது பிரச்சனைக்குரிய விஷயம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad