முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் - அத்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார் பிரதமர் மஹிந்த - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் - அத்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார் பிரதமர் மஹிந்த

பாரிய மற்றும் சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2021.01.09) அத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

இணைய ஸும் தொழில்நுட்பம் ஊடாக பாரிய மற்றும் சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் குழுவுடன் கலந்துரையாடிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இனப்பெருக்கம் செய்யப்படும் ஒரு கோழியின் விலையை 220 ரூபாயாக குறைத்தல், வருடத்திற்கு கொண்டுவரப்படும் தாய் கோழிகளின் எண்ணிக்கையை 80 ஆயிரத்திற்கு மட்டுப்படுத்தல், கோழி தீவன கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தலுக்கான கடன் நிவாரணம் பெறல், சட்டவிரோத இனப்பெருக்கம் செய்யும் நிலையங்கள் மூன்றினது செயற்பாட்டை தடை செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தின் பணிப்பாளர் சபை இதன்போது பிரதமரிடம் முன்வைத்தனர்.

குறித்த கடன் நிவாரண வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் போது அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளை விழிப்பூட்டிய பிரதமர் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

சந்தையில் முட்டை விலை இதுவரை குறைவடந்துள்ளதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, பீ.வை.ஜீ.ரத்னசேகர, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad