ஐக்கிய மக்கள் சக்தி இனவாத ரீதியில் செயற்படின் வெளியேறுவேன் என்கிறார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

ஐக்கிய மக்கள் சக்தி இனவாத ரீதியில் செயற்படின் வெளியேறுவேன் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தி இனவாதமாக செயற்படின் வெளியேருவேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி. சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும். 

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழுக் கூட்டம், திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். 

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்.

எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால் Jaffna Muslim இணையத்திற்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் சடலம் எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்தொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment