கல்முனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

கல்முனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்

(எம்.எப்.எம்.பஸீர்)

அம்பாறை - கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுசு வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

நேற்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான்னியக்க துப்பாக்கியைக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் சில வாகனங்களுக்கும், விற்பனை நிலைய கண்ணாடிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளதாகவும், சாதாரணமாக நடந்து வரும் நபர் ஒருவர், உரப்பைக்குள் இருக்கும் துப்பாக்கியைக் கொண்டு சுடுவது அதில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்த நபர் தொடர்பிலோ அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தொடர்பிலோ உறுதியான தகவல்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் அறிவியல் தடயங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad