தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா, தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்கக்கூடாது எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று (26.01.2021) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்திலேயே குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சட்ட விரோதமான மீன் பிடித் தொழிலி்ல் ஈடுபடுவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடு கிடைத்து வருவதாகவும், அதேபோன்று, பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment