அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதியாக ட்ரம்ப் திகழ்வார், பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது - அர்னால்ட் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதியாக ட்ரம்ப் திகழ்வார், பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது - அர்னால்ட்

அமெரிக்க கேபிட்டலை கடந்த வாரம் தாக்கிய கும்பலை நாஜிகளுடன் ஒப்பிட்டு, ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்ற தலைவர் என்று ஹாலிவுட் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநனர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ட்ரம்ப் "அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதியாக திகழ்பவர் " என்றும் அவர் கூறினார்.

கடந்த நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதனால் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

எனினும் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ஜனாதிபதி ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வந்தார். இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் கடந்தவாரம் மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க கேபிடல் ஹில் வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஞாயிற்றுக்கிழமை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே காணொளி மூலமாக மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு தேர்தல் மற்றும் நியாயமான தேர்தலின் முடிவுகளை தடுக்க முயன்றார். பொய்களால் மக்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டத்தை அவர் நடினார். 

1938 ஆம் ஆண்டில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள நாஜிக்கள் யூத வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக ஸ்தலங்களில் தாக்குதலை மேற்கொண்டனர்.

அதேபோல் கடந்த புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதியாக திகழ்பவர் ட்ரம்ப், அவர் முதுகெலும்பு அற்றவர் என்றும் அர்னால்டு கூறினார்.

No comments:

Post a Comment