முல்லைத்தீவில் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

முல்லைத்தீவில் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலம்புரிச் சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர் சந்தேகநபர்களையும், வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் வலம்புரிச்சங்கு ஐந்து கோடி ரூபா பெறுமதிக்கு விற்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment

Post Bottom Ad