அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று சந்தையிலிருந்து ஆரம்பித்த கொரோனா தொற்று அலை காரணமாக சுமார் மூன்று வாரங்கள் முடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொழில் வாய்ப்பை இழந்த பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. 

சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள், தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் என்று பட்டியலிட்டு ஒவ்வொரு கட்டங்களாக அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தனது பணியை சிறப்பாக நேர்த்தியாக செய்த அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம். எஸ். எம் றஷான் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் சகலருக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad