யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, கடந்த 8 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்பு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள் நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவு கூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என முன்னாள் மாநகர சபை முதல்வரும் உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். 

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, முதல்வர் சபை அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்வு கூடி ஆராய்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment