கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அங்கஜன் தலைமையில் இடம்பெற்றது - பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அங்கஜன் தலைமையில் இடம்பெற்றது - பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் நேற்றையதினம் (13) காலை கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை, கரவெட்டி பிரதேச செயலகர் ஈ.தயாரூபன், கரவெட்டி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.ரகுநாதன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், கரவெட்டி பிரதேசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் கரவெட்டி மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் Covid-19 சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

இந்த கூட்டத்தொடரில் வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சனை, கால்நடை வளர்ப்பு தொடர்பாக, சமூக உட்கட்டமைப்பு தொடர்பாக, கல்வி,சுகாதாரம், விவசாயம், அனர்த்த முகாமைத்துவம், வீடமைப்பு என என பல்வேறு விடயங்கள் சம்மந்தமாகவும் பல துறைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. 

முக்கியமாக யாழ் மாவட்டத்தில் விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் கரவெட்டி பகுதியில் விவசாய மாதிரி கிராமத்துக்கான சில குளங்கள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கரணவாய் கிழக்கு பிரதேசத்தில் உள்ள உள்ளன விளையாட்டு அரங்கிற்கான மிகுதி வேலைக்கான 7 மில்லியன் ரூபாய் நிதி தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

NHDA வீட்டுத்திட்டங்களுக்கான காணி உறுதி பத்திரங்களை பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

சமரபாகு பனங்கட்ட தொழிற்சாலைக்கு கிணறு, சுற்றுமதில் மற்றும் இயந்திரங்கள் தேவை எனவும் இந்த தொழிற்சாலை மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் உயர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ந்து துன்னாலை கிழக்கு பகுதியில் கள்ள மணல் ஏற்றல் சம்பந்தமான பிரச்னை இருப்பதாகவும், மற்றும் அப்பகுதியில் நீர் பம்புகள் களவாடப்படுவதாகவும் இவை போன்ற காரணங்களால் அப்பகுதியில் உப காவல் நிலையம் அமைக்கப்படவேண்டும் அல்லது காவல்துறையினர் உடனடி கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் பொது அமைப்புக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad