மேலும் மூன்று நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

மேலும் மூன்று நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தப்போவ, ராஜாங்கனை மற்றும் தெதுறுஓய நீர்த் தோக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி தப்போவ நீர்த் தேக்கத்தின் 4 வான் கதவுகள், ராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் 12 வான் கதவுகள் இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளன.

வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதனால் கலா ஓயாவில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால், புத்தளத்தில் இருந்து எழுவான்குளம் ஊடாக மன்னார் வரை பயணிக்கின்ற பாதையில் போக்கு வரத்து தடை ஏற்பட்டுள்ளது.

கலா ஓயா செல்கின்ற சப்பாத்து பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் முகாம் தற்பொழுது அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad