கடற்படை பயிற்சியின்போது ஏவுகணைகளை சோதனை செய்த ஈரான் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 14, 2021

கடற்படை பயிற்சியின்போது ஏவுகணைகளை சோதனை செய்த ஈரான்

ஓமன் வளைகுடாவில் ஈரான் கடற்படை பயிற்சி மேற்கொண்ட அதேவேளையில், ஏவுகணை சோதனையையும் நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் ஈரான் ஆயுதங்களை தயார் செய்து வைத்துள்ளது. ஏவுகணை சோதனையை அடிக்கடி நடத்தியும் வருகிறது. இந்த நிலையில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடற்கரை பயிற்சில் ஈடுபட்டது.

அப்போது கப்பலில் இருந்தும், கடற்கரையோரத்தில் இருந்தும் ஏவுகணை செலுத்தி பரிசோதனை செய்துள்ளது. ஆனால் முழு விவரத்தை ஈரான் அரசு வெளியிடவில்லை.

கடந்த ஜூலை மாதம் 280 கிலோ மீட்டர் தொலைவிலான இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணையை சோதனை செய்ததாக ஈரான் தெரிவித்திருந்தது. 

‘‘ஈரான் கடற்பகுதியில் எந்தவொரு மீறலும், படையெடுப்பும் நிகழ்ந்தாலும் தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும் ஏவுகணை தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்பதை எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிகப்பெரிய ராணுவ கப்பலின் அறிமுக விழாவையொட்டி ஈரான் கடற்படை நேற்றும் இன்றும் பயிற்சியை மேற்கொண்டது.

No comments:

Post a Comment