இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனர் ஒருவரின் உடல் செயலிழப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனர் ஒருவரின் உடல் செயலிழப்பு

இஸ்ரேல் இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனர் ஒருவரின் கழுத்து முதல் உடல் முழுவதும் செயலிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆடவரின் கழுத்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. 

தெற்கு ஹெப்ரோனில் உள்ள அல் துவானா கிராமத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான ஹாரூன் ரஸ்மி அபூ அரம் என்ற இளைஞன் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன தரப்பை மேற்கோள்காட்டில் செய்தி வெளியானது.

தமக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கி ஒன்றை இஸ்ரேலிய துருப்புகள் அபகரிக்க முயன்றபோது அதனை தடுக்க அந்த இளைஞன் முயன்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமானா வபா குறிப்பிட்டுள்ளது. 

எனினும் சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுவதை தடுப்பதற்கு இஸ்ரேலிய துருப்புகள் நடவடிக்கை எடுத்தபோது பலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது வானை நோக்கி சுட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad