புதிய வைரசினை அடையாளம் காண்பதற்கான சோதனை சாதனங்கள் இலங்கையில் இல்லை என்பதால் இது முன்னரே நுழைந்திருக்கலாம் - அரசாங்க மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

புதிய வைரசினை அடையாளம் காண்பதற்கான சோதனை சாதனங்கள் இலங்கையில் இல்லை என்பதால் இது முன்னரே நுழைந்திருக்கலாம் - அரசாங்க மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினை அடையாளம் காணும் விடயத்தில் சுகாதார அமைச்சு பொறுப்புணர்வற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது என அரசாங்க மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய வீரியமிக்க வைரஸ் உலகின் பல நாடுகளிற்கும் பரவியுள்ளதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் மரபணுபகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பெரும் ஆபத்து உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவும் புதிய வைரசினால் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளி நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய வகை வைரசினை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனை சாதனங்கள் இலங்கையில் இல்லை என்பதால் இந்த வைரஸ் இலங்கையில் முன்னரே நுழைந்திருக்கலாம் எனவும் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த வைரசினை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மிகவும் திறனற்றவை என தெரிவித்துள்ள ரவி குமுதேஸ் எதிர்காலத்தில் இந்த வைரசினால் பாதிக்கப்பட்ட பலரை அடையாளம் காண்பது கடினமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் மூலமாகவும் புதிய வைரஸ் பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment

Post Bottom Ad