பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய சர்வதேச பிடியாணை - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய சர்வதேச பிடியாணை

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான கே. உதார சம்பத் என்பவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக பிடியாணையை பிறப்பிக்க கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹைல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை தயாரித்து சந்தேகநபர் வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாக பிரதி சொலிஷிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்களுடன் இணைந்து, ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக குறித்த சந்தேகநபர் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்திள் அதிகாரிகள் உள்ளிட்ட 16 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad