மேற்கு எத்தியோப்பியாவில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 14, 2021

மேற்கு எத்தியோப்பியாவில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சூடான் மற்றும் தெற்கு சூடானின் எல்லையான பெனிஷங்குல் - குமுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை இந்த படுகொலை நடந்ததாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையத்தின் (ஈ.எச்.ஆர்.சி) செய்தித் தொடர்பாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஆரோன் மாஷோ குறிப்பிட்டுள்ளார்.

2 முதல் 45 வயது வரையிலான 80 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கூறினார்.

தாக்குதலுக்கு பொறுப்புக் கோரிக்கை இதுவரை இல்லை, தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் குறித்த உடனடி தகவலும் இல்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்றும் மாஷோ கூறினார்.

சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெனிஷங்குல் - குமுஸின் மெட்டகல் வலயத்தில் உள்ள தலெட்டி என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மெட்டெக்கலில் தொடர்ச்சியான வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மாஷோ கூறினார்.

No comments:

Post a Comment