பன்றிக்கு வலை வைத்த 4 பிள்ளைகளின் தந்தை பலி - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

பன்றிக்கு வலை வைத்த 4 பிள்ளைகளின் தந்தை பலி

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கியு மேற்பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி தனது வீட்டுத் தோட்டத்தில் பன்றிக்கு வலை வைப்பதற்கு முயற்சித்த நிலையில், கவனயீனம் காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் மரண விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சம்பவ இடத்துக்கு வரும்வரையில் உயிரிழந்தவரின் சடலம் அவரது வீட்டுத் தோட்டத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad