பதுளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உட்பட நால்வருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

பதுளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உட்பட நால்வருக்கு கொரோனா

பதுளை மகியங்கனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மகியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூன்று வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மகியங்கனையில் மேறகொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்று 25.01.2021 தெரியவந்துள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கொழும்பில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி விட்டு, விடுமுறையில் குறித்த வீட்டிற்கு வந்துள்ளார்.

மூன்று தினங்கள் அவ்வீட்டில் தங்கியிருந்து, மீளவும் கொழும்பின் ஆடைத் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியது.

குறித்த இளைஞரின் மூலமாகவே, அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மகியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மேற்குறித்த நால்வரும், காகொல்லை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad