இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 35 பேர் உயிரிழப்பு, 630 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 15, 2021

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 35 பேர் உயிரிழப்பு, 630 பேர் காயம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு, 630 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மஜெனே நகரிலிருந்து வடகிழக்கில் ஆறு கிலோமீட்டர் (3.73 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு பல்லாயிரக் கணக்கான மக்கள் பீதியடைந்ததுடன், 15,000 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

எனினும் இந்த நலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை ஆனால் நில அதிர்வுகள் ஏழு வினாடிகளுக்கு வலுவாக உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் ஹோட்டல் ஒன்றும் மேற்கு சுலவேசி ஆளுநரின் அலுவலமும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மின்சார விநியோகமும் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில மணி நேரங்களுக்கு முன்னர் (வியாழக்கிழமை), அதே மாவட்டத்தில் 5.9 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளை சேதப்படுத்தியுமிருந்தது.

பசிபிக் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படுவதைத் தாண்டி, அதிக டெக்டோனிக் செயல்பாடுகளைக் கொண்ட இந்தோனேசியா, தொடர்ந்து பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் சுலவேசியில் உள்ள பாலு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad