பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்க யோசனை - குளவி கொட்டிலிருந்து பாதுகாப்பதற்கு விசேட ஆடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்க யோசனை - குளவி கொட்டிலிருந்து பாதுகாப்பதற்கு விசேட ஆடை

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வழங்கப்படும் ஏழு பேர்ச் காணிக்கு பதிலாக வீட்டுத் திட்டத்தில் சிறு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் பத்து பேர்ச் காணியை வழங்க அமைச்சரவைக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி. புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்போது பெருந்தோட்ட யாக்கங்கள் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதற்கு நிலங்களை வழங்குவதில் முழுமையான விருப்பம் தெரிவிப்பதில்லை சில நேரங்களில் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க ஏழு பேர்ச் காணி கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. அதுவும் முறையாக வழங்கபடவில்லை.

இனிவரும் காலங்களில் அமையபெறும் வீட்டுத் திட்டத்தில் சிறு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் பத்து பேர்ச் காணியை வழங்க அமைச்சரவைக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் அண்மைக் காலமாக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வருகின்றனர். இதுவரைக்கும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தொழிலாளர்களை குளவி கொட்டிலிருந்து பாதுகாப்பதற்கு விசேடமான ஆடை தயாரிக்கப்பட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் பயிர்ச் செய்கையின் பரம்பல் தொடர்பாகவும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நுவரெலியாவில் அழிந்து போயுள்ள பெயாஸ் உற்பத்தியை மீண்டும் அதிகரிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அதற்கு தேவையான அறிக்கை ஒன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

இக்கலந்துரையாடலில் சி.பி. ரத்நாயக்க, மஹிந்தாநந்த அலுத்கமகே எஸ்.பி. திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித்து யு.கமகே. இராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், திலுன் அமுனுகம, பிரசன்ன ரணதுங்க, நகர பிரதச சபைகளிள் தலைவர்கள் அரச திணைக்கள அதிகாரிகள்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment