வட மாகாணத்திற்கு 10 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் தேவை - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

வட மாகாணத்திற்கு 10 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் தேவை

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொவிட்19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

மேலும் வட மாகாணத்தில் கொவிட்19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சுக் கோரியிருந்தது.

அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வட மாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.

அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad