கண்டி - திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு - News View

Breaking

Post Top Ad

Friday, December 4, 2020

கண்டி - திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு

கண்டி - திகன பகுதியில் இன்று (05) மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 5.41 மணியளவில் நில அதிர்வு பதிவானதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

பல்லேகல மற்றும் மரதன்கடவல நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இன்றைய நில அதிர்வு பதிவாகியுள்ளது. 2 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இதேவேளை, விக்டோரியா நீர்த் தேக்கத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்காணிப்பகத்திலும் இன்று நில அதிர்வு பதிவானதாக நீர்த் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் குறிப்பிட்டார்.

கண்டி - திகன பகுதியில் அண்மைக் காலமாக இடைக்கிடையே நில அதிர்வு பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்து விசேட குழுவினர் விரிவான சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad