மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் டெங்கு சுத்திகரிப்பு வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் டெங்கு சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை, பிரதேசத்தில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று சனிக்கிழமை மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கை இல்லாமல் செய்வோம் எமது பிரதேசத்தை சுத்தமாக்குவோம் என்ற வேலைத்திட்டத்தில் மீராவோடை ஆட்டோ சங்கம், பிரதேச விளையாட்டு கழகங்கள் மற்றும் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சுத்தம் இல்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.அனீஸ் ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை வட்டார உறுப்பினர் எஸ்.எம்.அன்வர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment