கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Sunday, December 6, 2020

கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொரோனா!

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் பணியாற்றிய எரிபொருள் கடைக்கு அருகிலுள்ள குடிநீர் விநியோக நிலையம் மற்றும் மலர்ச்சாலை ஆகியவற்றிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குடிநீர் விநியோக நிலையத்திலிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர்களோடு தொடர்பிலிருந்த பலருக்கு முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11 ஆவது நாள் பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதே மலர்ச்சாலை இளைஞனுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்துக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒருவருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad