திருகோணமலை மாவட்டத்தில் 06 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 30, 2020

திருகோணமலை மாவட்டத்தில் 06 பேருக்கு கொரோனா

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (30.12.2020) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் அழகைய்யா லதாகரன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது கொரோனா தொற்று அக்குடும்ப உறுப்பினர்களுக்கு உறதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உப்புவெளி பிரதேசத்தில் வசிக்கும் திருகோணமலை தீயனைப்பு பிரிவில் கடமை புரியும் ஒருவருக்கும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவரின் உதவியாளரான நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குமாக ஆறு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்திய கலாநிதி திரு.அழகைய்யா லதாகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad