எங்களது ‘ஸ்புட்னிக்-V’ கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிக்கிறது : ரஷியா தகவல் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

எங்களது ‘ஸ்புட்னிக்-V’ கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிக்கிறது : ரஷியா தகவல்

கொரோனோ வைரஸ் தொற்றுக்கான ஸ்புட்னிக்-V தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிக்கிறது என்று ரஷியா தெரிவித்துள்ளது.

கொரேனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபோது, ரஷியா ‘ஸ்புட்னிக்-V’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளோம். தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று ரஷியா அறிவித்தது. 

மேலும், உலகின் முதன் கொரோனா தடுப்பூசி என ரஷியா அங்கீகரித்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பின. நம்பகத்தன்மை இல்லை. நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆய்வு குறிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தின.

அதன்பின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் சற்று குறையத் தொடங்கியதும், கொரோனா தடுப்பூசி குறித்து பெரிதாக பேசப்படவில்லை.

இதற்கிடையில்தான் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. அது 90 சதவீத பாதுகாப்பானது என அறிவித்தது. 

இந்நிலையில் ஸ்புட்னிக்-V 92 சதவீத பயன்அளிக்கிறது என்று ரஷியா தெரிவித்துள்ளது.

3ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டது. 

அதன்பின் கொரோனா பொசிட்டிவ் நபர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 92 சதவீதம் பயன் அளிப்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad