வெள்ளவத்தையிலிருந்து பொகவந்தலாவை சென்ற இளைஞருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

வெள்ளவத்தையிலிருந்து பொகவந்தலாவை சென்ற இளைஞருக்கு கொரோனா!

கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு வந்த பொகவந்தலாவை இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .

நேற்றையதினம் (17) குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று PCR பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (18) கிடைத்த மருத்துவ அறிக்கையிலே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பொலித்தீன் வர்த்தக நிலையமொன்றில் பணி புரிந்து வந்த இவர், கடந்த 10ஆம் திகதி கொழும்பிலிருந்து இ.போ.ச பஸ்ஸில் ஹட்டனுக்கு வந்துள்ளதோடு, ஹட்டனிலிருந்து தனியார் பஸ்ஸொன்றில் பொகவந்தலாவை வந்து அங்கிருந்து முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பொகவந்தலாவை மேல்பிரிவைச் சேர்ந்த இவர், தீபாவளி பண்டிகையை நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குள்ளான 19 வயதுடைய குறித்த இளைஞனை பொகவந்தலாவை தோட்ட வைத்தியசாலையில் தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பை பேணியவர்களின் தகவல்களைப் பெற்று அவர்களையும் சுயதனிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொகவந்தலாவை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad