விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி

விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவை வழங்கும் ஏற்பாடுகள் பற்றி நான்காயிரம் தபாலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பசும்பால் உற்பத்தியை அதிகரித்து, பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்தும் நோக்கிலான காப்புறுதி முறைமையொன்று வகுக்கப்படும் என்றும் ஹேமசந்திர ஏப்பா தெரிவித்துள்ளார்.

இதில், மாட்டுத் தொழுவங்களை அமைத்தல், கறவைப் பசுக்களை கொள்வனவு செய்தல், வீட்டுத் தோட்ட செய்கை போன்றவற்றிற்கு கடனுதவி வழங்கப்படும். தரமுயர்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நாற்றுமேடைகளை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment