இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி கலந்துரையாடவில்லை - போலிச் செய்தி என்கிறது சீனத் தூதரகம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி கலந்துரையாடவில்லை - போலிச் செய்தி என்கிறது சீனத் தூதரகம்

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று சீனத் தூதரகம் மறுப்பு வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் நேற்று இணையவழியின் ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக பிரபல ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியை மேற்கோள்காட்டி, சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இரு நாடுகளின் தலைவர்களும் மிக நெருக்கமான தொடர்புகளையும் நட்புறவையும் பேணி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அதனை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். 

எது எவ்வாறெனினும் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டு கருத்தரங்கில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் இணையவழியின் ஊடாக இணைந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad