வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பல மறுக்கப்பட்டுள்ளன - முன்னிலை சோசலிசக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பல மறுக்கப்பட்டுள்ளன - முன்னிலை சோசலிசக் கட்சி

(இராஜதுரை ஹஷான்) 

2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பல மறுக்கப்பட்டுள்ளன. தேசிய வருமானத்தை ஈட்டும் திட்டங்கள் ஏதும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நடுத்தர மக்கள் பயன் பெறும் சாதக அம்சங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பல வரவு செலவு திட்டத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியளாளர்களின் கொடுப்பனவுகளில் குறிப்பிட்ட நிதி தொகை இரத்து செய்யப்படுவதாக ஓய்வூதிய பயனாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நாளை மறுதினமும் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியினரும் இணைந்து கொள்வார்கள்.

தேசிய வருமானத்தை ஈட்டும் பொதுவான திட்டங்கள் 2021 பாதீட்டில் உள்ளடக்கப்படவில்லை. அடுத்த வருடம் நாட்டின் அதிகளவானோர் தொழில் வாய்ப்பினை இழக்கும் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment