கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை

கொழும்பு மெனிங் மொத்த வர்த்தக சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெனிங் மொத்த வர்த்தக சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மெனிங் சந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் வரை அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வது முக்கியமானது என்று தெரிவித்தார்.

கொழும்புக்கு அப்பால் பேலியகொடையில் தற்காலிகமாக மெனிங் மொத்த வர்த்தக சந்தையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு மெனிங் மொத்த வர்த்தக சந்தையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இதில் கலந்துகொள்ள முடியும். இருப்பினும் பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் இவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு அதற்கான பெயர்பட்டியலை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

கொழும்பு மத்திய பிரதேச பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டால் இதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை தெரிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

நிஷாந்த தர்மசேகர என்ற அதிகாரியை 071 8591551 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad