குடும்பஸ்தர் ஒருவர் அடித்து, வெட்டிக் கொலை - முல்லைத்தீவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

குடும்பஸ்தர் ஒருவர் அடித்து, வெட்டிக் கொலை - முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து, வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. 32 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய குடும்ப பெண் ஒருவர்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலில், தலையில் இரண்டு வெட்டுக் காயங்கள் காணப்படுவதால் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment

Post Bottom Ad