தனிமைப்படுத்தல் பிரதேசங்களை அடுத்த வாரமளவில் விடுவிக்க தீர்மானம் - இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

தனிமைப்படுத்தல் பிரதேசங்களை அடுத்த வாரமளவில் விடுவிக்க தீர்மானம் - இராணுவத் தளபதி

நாட்டில் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை அடுத்த வாரமளவில் விடுவிப்பதற்கு தீர்மானித்து வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தனிமைப்படுத்தல் சட்டம் முழு நாட்டிலும் அமுலாக்கப்படவில்லை. தற்போது கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகளும், கொழும்பு மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஜனாதிபதியின் ஆலோசணையின் பேரில் பொலிஸ் பிரிவு முழுவதும் தனிமைப்டுத்துவதா? அல்லது அதன் சில பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இறுதியில், மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை அடுத்த வாரமளவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad