ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தார் என்.கே.றமழான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தார் என்.கே.றமழான்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிரான முறைப்பாடொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ளார்.

முறைப்பாட்டு கடிதத்தை இன்று (18) மனித உரிமைகள் ஆணைக்குவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

அவர் செய்துள்ள முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவிக்கப்ப்டுள்ளதாவது,

நாகூர்க்கான் றம்ழான் 33,
கச்சிமுகம்மது வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு 
2020 11 15

பணிப்பாளர், 
விசாரணைகள் மற்றும் புலனாய்வு 
மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை
இல 14 
ஆர் டிமெல் மாவத்தை 
கொழும்பு 04 

முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிரான முறைப்பாடு

ஐயா,

உலகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் கொடிய கொரோனா கோவிட் 19 தொற்று எமது இலங்கை திருநாட்டையும் விட்டு வைக்கவில்லை அதன் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அசூர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

ஒருபுரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயம் மறுபுரம் அதன் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. 

குறித்த தொற்றுக் காரணமாக இலங்கையில் பல மதங்களையும் இனங்களையும் சேர்ந்த பலரும் மரணித்து வருகின்றனர் அவ்வாறு நிகழும் மரணங்களில் முஸ்லிம் ஜனாசாக்களின் உடல்களை இந்த நாட்டு அரசின் சுகாதார அமைச்சும் மற்றும் சுகாதார பணிப்பாளர் ஆகியோர்கள் எமது இஸ்லாமிய மதக் கலாச்சார உரிமைகளை மீறி நல்லடக்கம் செய்ய விடாமல் எரித்து வருகின்றது. இது இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொன்றுதொட்டு பேணிவந்த எமது இஸ்லாமிய மத கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானதும் உரிமை மறுப்பானதுமாகும் 

இவ்வாறு உலக நாடுகளில் கொரோனா தொற்றுக் காரணமாக தினமும் பல ஆயிரம் மரணங்கள் ஏற்பட்டும் வருகின்றது அவ்வாறு ஏற்படும் மரணங்களின் உடல்களை அந்த நாடுகளில் அவரவர் மதங்களின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்டு இந்த நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் உடல்களையும் எமது மத கலாச்சாரத்தின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது எமது மதக் கலாச்சாரமாகும் 

கொரோனா தொற்றின் காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதால் எதுவித கிருமித் தொற்றுக்களும் ஏற்படாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள போதிலும் அதனை மீறி எமது இஸ்லாமியர்களின் உடல்களை இந்த அரசின் சுகாதார அமைச்சரும் சுகாதாரப் பணிப்பாளரும் எரித்து வருகின்றார்கள். இதற்கு எதிராக எமது மத உரிமையை முழுமையாக பெற்றுத் தருமாறு எனது முறைப்பாட்டை குறித்த சுகாதாரத் துறையினருக்கு எதிராக பதிவு செய்கின்றேன் 

எனவே எமது இனத்தின் மீறப்படும் உரிமையினை பெற்றுத்தந்து கொரோனா காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எங்களது மத கலாச்சாரத்தின் அடிப்படையில் நல்லடக்கம் செய்ய அனுமதியைப் பெற்றுத்தருமாறு மித்தாழ்யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம் 
நாகூர்கான் றம்ழான் JP

No comments:

Post a Comment

Post Bottom Ad