விளக்கமளிக்காது காலம் கடத்திவரும் அரவிந்தகுமார் - இராதாகிருஷ்ணன் விசனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

விளக்கமளிக்காது காலம் கடத்திவரும் அரவிந்தகுமார் - இராதாகிருஷ்ணன் விசனம்

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அரவிந்தகுமார் எம்.பிக்கு விளக்கமளிப்பதற்கு 14 நாட்கள் மலையக மக்கள் முன்னணியினால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இன்னும் விளக்கமளிக்கவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு விளக்கமளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஸ்ணனிடம், வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரவிந்தகுமார் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது கடந்துள்ள போதிலும், இதுவரை கட்சிக்கு எந்தவொரு விளக்கத்தினையும் அவர் வழங்கவில்லை.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன. அத்துடன் சிறுபான்மையினரின் நலன் குறித்து கருத்திற்கொள்ளாது இந்த 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்து தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சி சிறுபான்மை உறுப்பினர்கள் 20 ஆம் திருத்தச் சட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது ஆதரவு வழங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment