இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கக்கூடாது - எரான் விக்ரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கக்கூடாது - எரான் விக்ரமரத்ன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்களுக்கு நாட்டில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரங்களை வழங்கக்கூடாது. ஏனெனில் நாடு இக்கட்டான நிலைமையை சந்திக்கும்போது இவ்வாறானவர்கள் மற்ற நாட்டுக்கு சென்று விடுவார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமரினால் சமர்பிப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் நெல்லுக்கான உரத்துக்கு மாத்திரமே நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. இரசாயன உரத்துக்கு அந்த நிவாரணம் இல்லை. அதனால் செளபாக்கிய வேலைத் திட்டத்தின் அடிப்படையிலா வரவு செலவு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் ஓய்வு பெறும் வயதெல்லையை 60ஆக அதிகரித்திருப்பது நல்ல திட்டம். ஆனாலும் அண்மைக் காலத்தில் ஓய்வு பெற எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த விடயத்தில் அவர்களுக்கு தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்திப்பது தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகளை மேற்கொள்ளும் திட்டமா என்ற சந்தகமும் எமக்கு இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment