ஈஸ்டர் தாக்குதலை தடுக்க முடியாது, மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர் : விமல் வீரவன்ச - News View

Breaking

Post Top Ad

Sunday, November 22, 2020

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க முடியாது, மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர் : விமல் வீரவன்ச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க முடியாது, மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். நாம் இன்று கடுமையான பயணத்தை ஆரம்பிக்க முன்னைய ஆட்சியாளர்களே காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பலவீனமான நிலைமையை உருவாக்கியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர். ஈஸ்டர் தாக்குதலை தடுக்க முடியாது, மத்திய வங்கி கொள்ளையை நியாப்படுத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர். 

6.5 வீத வேகத்தில் சென்ற பொருளாதார வேகத்தை 2.5 வீதத்திற்கு கொண்டு நிறுத்தியவர்கள் இன்று எமது அரசாங்கத்தின் பலவீனம் குறித்து பேசுகின்றனர். அரச வாகனத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்த இடமளித்த அரசாங்கத்தை நடத்தியவர்கள் இன்று எமது பாதுகாப்பு செலவீனம் குறித்து பேசுகின்றனர். 

இவர்கள் எமக்கு வெற்றி தோல்விகள் குறித்து பேச வரவேண்டாம். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று தனக்கான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள ஏழு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அவ்வாறான மோசமான சட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்கள் இன்று எமது வரவு செலவு திட்டத்தை விமர்சிக்கின்றனர். நாம் இன்று கடுமையான பயணத்தை ஆரம்பிக்க முன்னைய ஆட்சியாளர்களே காரணமாகும்.

இன்று எமக்கு பொருளாதார நெருக்கடி, கொவிட் நெருக்கடி என சகல விதத்திலும் சிக்கலை தருகின்றது. நாம் மட்டுமல்ல உலக நாடுகளே தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் நாம் சகல சவால்களையும் சரியாக எதிர்கொண்டு விடை தேடிக் கொண்டுள்ளோம். கொவிட் காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால் இன்று நிலைமை என்னவாகியிருக்கும்.

நாம் தேசிய தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றோம், எமது தேசிய தொழிலாளர்கள் சகல விதத்திலும் தயாராக உள்ளனர். அதற்கான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தொழிநுட்ப, வள முகாமைத்துவ வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

தேசிய விவசாயத்தை பலப்படுத்த வேண்டும், தேசிய உற்பத்திகளுக்கு சகல வாய்ப்புகளையும் உருவாகிக் கொடுக்க வேண்டும், இதனை இந்த வரவு செலவு திட்டம் சரியாக உருவாகிக் கொடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad